Advertisment

மனிதர்களை நாயுடன் ஒப்பிட்டும், சமூகத்தை நியாயப்படுத்தியும் பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்!

கேரளாவில் நடைபெற்ற உலகத் தமிழ் பிராமணர்கள் மாநாட்டில் மனிதர்களை நாய், குதிரைகளுடன் ஒப்பிட்டும் சமூகத்தைநியாயப்படுத்தியும் பேசிய பேராசிரியர் வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அபெகா பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதுக்கோட்டையில் இயங்கி வரும் அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் நா.ஜெயராமன் புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

Advertisment

complaint on Vengadakrishnan to police

12.08.2109 அன்று வாட்ஸ்அப் மூலமாக எனக்கு அனுப்பப்பட்ட காணொளி காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கடந்த ஜூன் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பிராமணர்கள் மாநாட்டில் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழக பேராசிரியர் வெங்கடகிருஷ்ணன் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதில், நாய்களில் பல ஜாதி இருப்பது போல மனிதர்களிலும் கீழ்சமூகம், மேல்சமூகம்உள்ளது என்றும் அதேபோல குதிரையிலும் பல ஜாதிகள் என்றும் மனிதர்களை நாய் மற்றும் குதிரையுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இது மக்களிடையே சமூகரீதியான விரோத உணர்ச்சிகளையும், பிரிவினையையும் தூண்டும் கெட்ட நோக்கில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும், மனித மாண்பினை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மனிதர்களை நாயுடனும், குதிரையுடனும் ஒப்பிட்டும் சமூகத்தில் சாதி இருப்பதை நியாயப்படுத்தியும் அவர் பேசியுள்ளது இந்திய இறையாண்மைக்கு எதிரானது மட்டுமல்ல. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14-க்கு எதிரானதாகும். எனவே, இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 153(யு), 153(டீ), 29டீ, 499 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வெங்கடகிருஷ்ணன் மீதும், அதற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

CasteSystem police Professor pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe