Advertisment

அண்ணாமலை மீது திருச்சி எஸ்.பியிடம் புகார்

Complaint to Trichy SP on Annamalai

Advertisment

அமைச்சர் அன்பில் மகேஷின் புகழுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அண்ணாமலை பொய் தகவல்களை வெளியிட்டதாகக்கூறி, அவர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரும், அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளருமான முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி எஸ்.பி.யிடம் புகார்அளித்துள்ளார்.

அதில், “பாஜக தலைவர் அண்ணாமலைதனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பற்றி அவதூறாகவும், உண்மைக்கு மாறான,பொய்யான, கற்பனை செய்யப்பட்ட ஒரு படங்களை வைத்து, ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்ததை பார்த்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதனால் எனக்கு மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று பின் மருத்துவமனையில் இருந்து வீடு திருப்பியுள்ளேன். ஆகவே மக்களிடம் நன்மதிப்பை பெற்ற மறைந்த அன்பில் தர்மலிங்கம் மற்றும் அன்பில் பொய்யாமொழி ஆகியோரின் குடும்ப கௌரவத்தை கெடுக்கும் எண்ணத்தில் பொய் செய்தியை வெளியிட்ட அண்ணாமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

complaint trichy Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe