சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாகஆடிட்டர் ஜெனரல் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பொதுக்கணக்குக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் தாள்கள் நவீனமயமாக்கப்பட்டதில் 77 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாகவும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனின் உத்தரவில்லாமல்அது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக வரும் டிசம்பர் 2 ஆம் தேதி பொதுக்கணக்குக் குழு விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.