Skip to main content

பொன்மாணிக்கவேல் மீதான புகார் குறித்து பரிசீலனை-டிஜிபி அலுவலகம்!!

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

சிலை கடத்தல் தடுப்புபிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 12 அதிகாரிகள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

pon

 

சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ஒரு டிஎஸ்பி, நான்கு ஆய்வாளர்கள், ஒரு ஏடிஎஸ்பி, ஆறு சார்பு ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 12 பேர் தங்களுக்கு சிலைகடத்தல் பிரிவில் இருந்து இடமாற்றம் வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

 

இதுபற்றி  டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 

சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் ஒரு டிஎஸ்பி, நான்கு ஆய்வாளர்கள்,ஒரு ஏடிஎஸ்பி, ஆறு சார்பு ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 12 பேர் பொன்.மாணிக்கவேல் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இன்றி  வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை நடத்தவேண்டும் என பொன்மாணிக்கவேல் வற்புறுத்துவதாகவும், அதற்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை திட்டுவதாகவும், மிரட்டுவதாகவும் இதனால் தங்களுக்கு பணிமாறுதல் வேண்டும் என மனு கொடுத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாகச் சிக்கிய டிஎஸ்பி

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

DSP arrested for taking bribe of Rs.1 lakh

 

திருச்சி மாவட்டம் பூலாங்குடியைச் சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா(45) இவர் ஆவண எழுத்தராகத் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார் பதிவு செய்த வீட்டு மனை தனக்குத்தான் சொந்தமானது என்று சுந்தரம் புகார் அளித்ததின் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு, குமார் மற்றும் எட்டு நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

இந்த குற்ற வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டே பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்த போலீசார், கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பத்திர எழுத்தர் கீதாவை மீண்டும் அழைத்து நேற்று(14.9.2023)  விசாரணை செய்துள்ளனர். 

 

அப்போது, பத்திர எழுத்தர் கீதாவை விசாரணை செய்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட்(53) என்பவர், உன் மீது குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும் மேற்படி வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் தனக்குத் தனியாக ஒரு லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமாறு மிரட்டிக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் படி, இன்று(15.9.23) மதியம் 3 மணியளவில் டிஎஸ்பி ஆல்பர்ட், பத்திர எழுத்தர் கீதாவிடம் இருந்து ஒரு லட்சம் லஞ்ச பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், டிஎஸ்பி ஆல்பர்ட்டை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

'எதற்கெடுத்தாலும் அரசியல் கட்சிகள் அர்ச்சகர்கள் குரவளையையே பிடிக்கின்றன'-பொன்.மாணிக்கவேல் பேட்டி   

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

'No matter what, the political parties are holding the priests' - Pon.Manikavel interview

 

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்தநிலையில் அங்கு உயிரிழந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஏற்றி விட்டோம். அதற்காக இன்று ஒன் ஹவர் ஆகிவிட்டது. மொத்தத்தில் கோவிலில் இருக்கக்கூடியவர்களை இரண்டு ஸ்டாப்பாக பிரிக்க வேண்டும். ஒன்று அறநிலை துறை அதிகாரிகள். இன்னொருவர்கள் கோவிலில் உள்ள ஸ்டாப். இவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் என டிபார்ட்மெண்ட் ஏற்றுக் கொள்வதில்லை.

 

இதை யாரும் கவனிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இதனை கவனிக்க வேண்டும். முக்கியமாக அரசியல் கட்சிகள் எதற்கெடுத்தாலும் கோவிலில் உள்ள அர்ச்சகர்களின் குரல்வளையை பிடிக்கிறார்கள். நல்லா புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வேற, அவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லை. மணியடிப்பவர்கள், மெய்க்காப்பாளர்கள், வாட்ச்மேன், கணக்குப்பிள்ளை, கோவில் சூப்பிரண்ட் என்று இருப்பார்கள். இவர்கள் யாரையும் டெம்பிள் ஸ்டாப்பாக எடுத்துக் கொள்வதில்லை'' என்றார்.