Complaint at police that  party leader diamond ring was missing from the hotel

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் முழு உருவ சிலையை பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்திய பாஜக மத்திய அரசைக் கண்டித்து இந்திய குடியரசு கட்சியின் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கண்டனப் பேருரை ஆற்றினார். பின்னர் வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எண் 217 இல் தங்கி முதல் மாடியில் உள்ள உணவகத்தில் மதிய உணவை அருந்திவிட்டு கை கழுவி விட்டு சிறிது நேரம் கழித்து தன்னுடைய கைவிரலை பார்க்கும்போது கைவிரலில் இருந்த வைர மோதிரம் காணாமல் போனதுதெரியவந்தது.

Advertisment

கை கழுவும் இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு மோதிரம் கிடைக்காமல் போனதால் ஹோட்டல் உள்ளே கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது, மேஜை அருகே மோதிரம் காணாமல் போனது எனத்தெரியவந்தாக கூறப்படுகிறது. இது குறித்து உணவகத்தின் நிர்வாகத்தினரிடம் பேசியபோது முரணாக பதிலளிக்கின்றனர். இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் செ.கு. தமிழரசன் புகார் அளித்துள்ளார்.