மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள கொள்ளிடம் புறவழிச்சாலையைநான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள்கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிக்காகசீர்காழிக்கு அருகே உள்ள திருமுல்லைவாசல், வேட்டங்குடி, பழையபாளையம், மேலப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்துமணல்அள்ளப்படுகிறது.
அதில்நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக லாரிகளால்அதிகளவிலான மணல் குவியலைஏற்றிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் செல்கின்றனர். அதனால் திருமுல்லைவாசல் முதல் சீர்காழிவரை உள்ள பகுதிகளில்மணல்சிதறிவிபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும்தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகலாரிகள் செல்லும் சாலைகளில்விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, விசிக கட்சியின் வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில்மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்சீர்காழி ஏஎஸ்பி லாமேக் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்துமனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "புறவழிச்சாலைக்காக லாரிகளில் கொண்டு செல்லப்படும் மணலைபாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், விபத்துகளை ஏற்படுத்தும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்வருகின்ற 19 ஆம் தேதியன்று பாதுகாப்பற்ற முறையில் செல்லும் லாரிகளை சிறைபிடித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.