Advertisment

மனைவி கொடுத்த புகார்! போக்ஸோவில் கணவர் கைது! 

Complaint given by wife! Husband arrested in Pocso

ஆத்தூர் அருகே, பெற்ற மகளென்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். மாணவிக்குக் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியுள்ளது. அவருடைய தாயார், மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த மாணவிக்கு வயிறு பெரியதாக இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர், பரிசோதனை செய்ததில் அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

Advertisment

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், மகளிடம் விசாரித்தார். தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் தந்தையே, பெற்ற மகளென்றும் பாராமல் அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்துவந்திருப்பதும், அதனால்தான் அவர் கர்ப்பம் அடைந்தார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் தாயார், ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, மாணவியின் தந்தையைக் கைது செய்தனர்.

POCSO attur Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe