Complaint of disturbance at SV Shekhar Police Station

தொலைபேசி மூலம் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் எஸ்.வி.சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

நடிகரும்முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ்.வி.சேகர் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.வி.சேகர் புகார் ஒன்றை அளித்தார். அதில் மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து யூடியூப் சேனல் உள்ளிட்ட ஊடகங்களில் பேசியதால் இதுபோன்ற கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். நடிகர் எஸ்.வி.சேகர் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment