h raja

Advertisment

ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகாரில் நடவடிக்கை கோரிய வழக்கில் சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவேற்காட்டை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மார்ச் 7ஆம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த மனுவில் "வைரமுத்து, பெரியார் குறித்து ஹெச்.ராஜா தெரிவிக்கும் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையிலும் இருந்தாலும் கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. மனநோயாளி போல பேசிவரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் " என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இது குறித்து சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 28க்கு ஒத்திவைத்தார்.