பாலத்தின்கீழ் சாலை நடுவே நிற்கும் லாரிகளால் விபத்து ஏற்படுவதால், அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேடவாக்கம் புதிய மேம்பாலத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட செங்கல் லாரிகள் சாலைக்கு நடுவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சிறு சிறு விபத்துகள் நடப்பதாக சந்தோஷபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினகரன் என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்தப்புகாரைப் பெற்றுகொண்ட போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக புகார்தாரர் தெரிவித்தார்.