Complaint demanding action against 4 YouTube celebrities!

யூடியூபில் ஆபாசமான பதிவுகளைப் பதிவேற்றம் செய்வதாக யூடியூப் பிரபலங்கள் 4 பேர் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் தபால் மூலம் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகாரில் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் குழந்தைகளைச் சீரழிக்கும் வகையில் யூடியூபில் ஆபாசமான பேச்சுக்களையும், வீடியோ பதிவுகளையும் பதிவிட்டுவருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் கார்த்தி, ''அதுபோன்ற புகார்கள் எதுவும் தன் கவனத்திற்கு வரவில்லை'' என தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் ஆன்லைனில் தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளில் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாகப் பேசி கேம் வீடியோ வெளியிட்ட மதன் என்பவர் கைது செய்யப்பட்டுதற்போது விசாரணையில் இருக்கும் நிலையில், இதுபோன்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.