ADVERTISEMENT

தமிழ்நாடு பிரிமியர் லீக்கை குறி வைத்து எழுந்துள்ள புகார்!

06:20 PM Sep 23, 2019 | Anonymous (not verified)

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாவும் புகார்கள் நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, சமீபத்தில் சென்னையில் நடந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது பெட்டிங் நடந்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் ஒன்றை எழுப்பியது. அதனால் அது தொடர்பாக அந்தப் போட்டிகளில் இடம்பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் ஆகியோர் உட்பட அணியின் உரிமையாளர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இது தொடர்பாக சென்னை கிரிக்கெட் சங்கத்தினரிடம் விசாரித்தபோது, "இது இந்தியா சிமெண்ட் சீனிவாசனைக் குறிவைத்து எழுப்பப்படும் புகார். பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் வினோத் ராய்க்கும் சீனிவாசனுக்கும் இடையே பிரச்சனைகள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த வினோத் ராய், மத்திய தணிக்கைத் துறை அதிகாரியாக இருந்த போது தான் 2ஜி குற்றச்சாட்டைத் தொடங்கி வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர்தான் இப்போது தமிழ்நாடு பிரிமியர் லீக்கைக் குறி வைத்துள்ளார் என்று கூறுகின்றனர். ஏற்கனவே ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல்.லில் 2 வருடத்துக்கு விளையாட முடியாமல் சஸ்பெண்ட் ஆனது. அதுபோல், பிரிமியர் லீக்கையும் சஸ்பெண்ட் செய்வது தான் அவருடைய நோக்கம் என்று சொல்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT