Skip to main content

சொத்து குவித்ததாக ஆர்.பி.உதயகுமார் மீது புகார்-புகார்தாரரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Complaint against RB Udayakumar to Anti-Corruption Department for amassing property - Anti-Corruption Department investigates the complainant

 

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதி அன்று தமிழக ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியிலிருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகளவிற்கு சொத்து குவித்துள்ளதாகவும், மேலும் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாகப் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் , அம்மா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் தினேஷின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் புகார்தாரரான வழக்கறிஞர் தினேஷ் இன்று மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் குறித்த விசாரணைக்காக வந்தார்.

 

இதையடுத்து புகார்தாரர் வழக்கறிஞர் தினேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் புகார் தன்மை குறித்தும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார்.

 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் தினேஷ் பேசியபோது, ஆர்.பி.உதயகுமார் பதவியிலிருந்தபோது அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுபொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் அதிக அளவிற்கு வருமானத்தை காட்டியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.