Complaint against A. Rasa: Candidate regrets I. Leoni's speech!

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும்முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Advertisment

திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், "அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமிகள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி” என தனது பேச்சில் குறிப்பிட்டார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சுஅரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை அவதூறாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது.

Advertisment

இதேபோல், தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.லியோனியின் பேச்சுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேயசிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள கார்த்திகேய சிவசேனாதிபதி, ''தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். நாட்டு மாட்டு பால் நல்லது என்று கூறியிருக்கலாம். அதை விடுத்து அந்த உதாரணம் தேவையற்றது'' என தெரிவித்துள்ளார்.

Complaint against A. Rasa: Candidate regrets I. Leoni's speech!

திமுக முக்கிய நிர்வாகிகள் இப்படி சர்ச்சையாக பேசியிருக்கும் நிலையில், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூக நீதி" என்று பதிவு செய்துள்ளார்.