rajini eps

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சென்னத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் ரஜினிகாந்த் மீது ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், ‘’தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். பொய்யான கருத்தை அவர் மக்களிடம் பரப்பி உள்ளார்.

போராடினால் உயிர் பலி ஆகிவிடும் என்பது போன்ற கருத்தை அவர் மக்களிடம் உருவாக்கி உள்ளார். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார். தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் அவர் கூறி இருக்கிறார். மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

Advertisment

மனுவை பெற்றுக்கொண்ட ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சிலம்பரசனுக்கு சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.