complaint against private school karate teacher ... Police investigation!

சென்னை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் கராத்தே ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அண்மையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபால் என்ற ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொண்டது தொடர்பான புகார்கள் வெளியாகி அதுதொடர்பாகபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்று பள்ளிகளில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தொடர்பாக புகார்கள் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே ஆசிரியராக இருப்பவர்கெபிராஜ். இவர் சொந்தமாக தனியாக கராத்தே வகுப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அதில் படித்து வரக்கூடிய மாணவி ஒருவருக்கும், அவர் பணியாற்றி வருகின்ற பள்ளியில் ஒரு மாணவிக்கும்பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கெபிராஜை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த 2 புகார்கள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட கராத்தே ஆசிரியர் கெபிராஜ் தலைமறைவானதாகதகவல்கள் வெளியாகின. அதன் பிறகு அவர் கும்மிடிப்பூண்டியில் இருக்கக்கூடிய உறவினர் ஒருவருடைய வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் நேரில் சென்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment