Complaint against pastor at age 22

Advertisment

தூத்துக்குடியில் தான் 15 வயது சிறுமியாக இருந்தபோது தேவாலய பாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 22 வயது பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கீழக்கோட்டை. இந்த பகுதியில் உள்ள ஆசீர்வாத சகோதர சபை என்னும் தேவாலயத்தில் பாஸ்டராக இருப்பவர் வினோத் ஜோஸ்வா. இவர் பாஸ்டராக இருப்பதோடு பாட்டு கிளாஸும் எடுத்து வந்துள்ளார். அப்போது பாட்டு கற்றுக்கொள்ள வந்த பதினைந்து வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஸ்டர் வினோத் ஜோஸ்வா தொடர்ந்து அச்சிறுமியை தனது ஆசைக்கு பயன்படுத்தி உள்ளார்.

தற்பொழுது 22 வயதான அந்த இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் தன்னை சந்திக்க வரும்படி பாஸ்டர் வினோத் ஜோஸ்வா துன்புறுத்தி உள்ளார். இதை தன் கணவரிடத்தில் கூறிய அந்த பெண் போலீசில் புகார் அளிக்க முன்வந்து புகாரும் அளித்தார். புகாரை தொடர்ந்து வினோத் ஜோஸ்வாவை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாஸ்டர் வினோத் ஜோஸ்வா மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.