Advertisment

ஆண் குழந்தைக்கு தவறான ஆபரேஷன் - மதுரை அரசு மருத்துவமனை மீது புகார்

Complaint against Madurai Govt Hospital for wrong operation on baby boy

Advertisment

விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் - கே.கே.நகர் காலனி - அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி கார்த்திகாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதால்கடந்த ஆண்டு நாக்கில் அறுவை சிகிச்சை செய்தனர்.

ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனுக்கு நாக்கிற்குப் பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்துஇது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது தொடர்பாககுழந்தையின் தந்தை மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றி செய்த அதிர்ச்சி சம்பவத்தின் எதிரொலியாக, சைல்டு லைன் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe