Advertisment

மகாவிஷ்ணு மீது புகார்; சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை

nn

Advertisment

சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில் 'தான் ஓடி ஒளியவில்லை இன்று சென்னை திரும்பியவுடன் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன்' என வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சென்னை போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மகாவிஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மகாவிஷ்ணு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகாரில்குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக என்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு தரக்கூடிய விளக்கத்தைப் பொறுத்து கைது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Investigation police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe