Advertisment

வீட்டுபெண்களை இழிவாக பேசிய எச்.ராஜவை கைது பண்ண சொல்லி புகார்!!

h raja

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள இந்து அறநிலைத்துறை ஊழியர்கள் எல்லோரும் தீடிர் என இன்று மதியம் வெளியே வந்து தீடீர் ஆர்பாட்டம் பண்ணினார்கள். எல்லோரும் ஒரே குரலில் கண்டிக்கின்றோம் எச்.ராஜாவை கண்டிக்கிறோம். இந்து அறநிலைத்துறை ஊழியர்களின் வீட்டு பெண்களை பற்றி தவறாக பேசிய எச்.ராஜவை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டனர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலிசார் பாதுகாப்பு கொடுத்தனர். இதற்கு இடையே பிஜேபி கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் வந்து எச்.ராஜாவுக்கு ஆதரவாகவும், இந்து அறநிலைத்துறை ஊழியர்களுக்கு எதிராகவும் கோஷம் போட போலிஸ் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Advertisment

இதற்கு இடையில் இன்று மாலை இந்து அறிநிலைத்துறை ஊழியர் அனைவரும் தனித்தனியே எங்கள் வீட்டு பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனுக்கள் தனித்தனியே கொடுக்கிறார்களாம்.

Advertisment

தமிழகம் முழுவதும் இதே போல் எச்.ராஜா மீது புகார் கொடுக்கிறார்கள் என்றார்கள்.

H Raja police protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe