கோவையில் சித்த மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி மரணம் அடைந்ததாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
கோவை புதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன் மல்லிகா தம்பதியினர்மகள் சத்யப்பிரியா (20) கோவை அரசு கலைக்கல்லூரியில்மூன்றாம் ஆண்டுபொலிடிக்கல் சயன்ஸ்படித்து வருகிறார்.மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் உறவினர் ஒருவரின் அறிவுறுத்தலின்பேரில்செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலையில்சித்த மருத்துவர் குருநாதனிடம் கடந்த (2019) ஜனவரி மாதம் முதல் ஏப்ரல்வரையில் சிகிச்சை பெற்று வந்த சத்யப்பிரியாவுக்குசித்த மருத்துவர் குருநாதன் தந்த மருந்துகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆபத்தான நிலையில் கடந்த ஏப்ரல் 22ந் தேதிகோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மே 1ந் தேதி சித்த வைத்தியர்குருநாதன் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மே31 ந் தேதி கோவை காவல் ஆணையரிடம்புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் திங்கள்கிழமைஅதிகாலை 2 மணிக்கு சிசிச்சை பலனின்றிசத்யப்பிரியா உயிரிழந்தார்.
மாணவி உயிரிழந்ததையடுத்து, சித்த மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தாங்கள் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.