Complaint- against a.raja- for insulting -and spreading -slander against- women!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதையதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் நோக்கோடு பேசியதாக, தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீதுஅ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் தலைமையில்,வீடியோ ஆதாரங்களுடன் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், தனி மனித ஒழுக்கமின்றி உண்மைக்கு மாறான செய்திகளைப் பொதுமக்களிடையே அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்டதாகவும் கூறி, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வீடியோ ஆதாரங்களுடன்,டிஜிபியிடம் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர்கள் திருமாறன், செல்வகுமார் தலைமையில் 6 பேர்புகார் அளித்துள்ளனர்.

Advertisment