கும்பகோணம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி 30 லட்ச ரூபாய் கேட்டு கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

kidnap

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி கிராமம் விளந்தொட்டி. கொள்ளிடக்கரையோரம் உள்ள அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் பாண்டியன் காலமாகிவிட்டார். அவர்களது மகள் சுபஸ்ரீ ப்ரியா கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.

இந்நிலையில் கல்லூரிக்குச் சென்ற மாணவி சுபஸ்ரீ வீடு திரும்பவில்லை. அவரது செல்போனில் இருந்து உறவினர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், சுபஸ்ரீயை கடத்தவிட்டதாகவும், 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவோம். இல்லை என்றால் அவரின் உடலைத்தான் வீட்டிற்கு அனுப்புவோம்". என கூறப்பட்டிருந்தது.

Advertisment

இதைக்கண்டு பதறிப்போன தாய் சித்ராவும் அவரது உறவினர்களும் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கும்பகோணத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசி.டி.வி.கேமராக்களில் உள்ள பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணை சுபஸ்ரீ பிரியா கும்பகோணத்தில் உள்ள ஓரு இளைஞரை ஒரு மாதமாக காதலித்ததாகவும், தற்போது சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.