Advertisment

நடிகர் சந்தானம் படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்!

இந்து மக்களில் குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி கேலி செய்துள்ள சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி போலிஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisment

 complains on Actor Santhanam and movie team!

இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் தலைவர் ரவிக்குமார் கூறுகையில், நடிகர்சந்தானம் நடித்து ஜான்சன் தயாரிப்பில் A1 அக்யூஸ்ட்நம்பர் ஒன் என்கிற படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் இந்து சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்தும் புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளது.

Advertisment

 complains on Actor Santhanam and movie team!

உள்நோக்கத்தோடு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிராமண சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டஇந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ஜான்சன் ராஜ நாரயணனன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

அதேபோல் அகண்ட பாரத மக்கள் கட்சி தலைவர் திருச்சி கோட்சே ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார்கள். அப்போது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக திருச்சி மாநகரகாவல் ஆணையர் அவர்கள் உறுதி அளித்தார்கள் என்றார்கள்.

case Movie report Santhanam thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe