Advertisment

நடிகர் அதர்வா மீது மோசடி புகார்

நடிகர் அதர்வா சொந்த தயாரிப்பில் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ''செம்ம போத ஆகாத'' இந்த படத்தின் உரிமத்தைமதியழகன் என்பவருக்கு 4.5 கோடிக்கு விற்பனை செய்தார் அதர்வா. படம் வெளிவருவதற்கு முன்பாக முன்பணமாக 3.5 கோடி ரூபாயை நடிகர் அதர்வா பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த படம் திரைக்கு வந்த அன்று மற்றொருவர் அதர்வா மீது மோசடி புகார்கொடுத்ததால் அந்த திரைப்படத்தின்முதல் நாள், முதல் இரண்டு காட்சி தடையானது. இதனால் படத்தின் உரிமம் பெற்ற மதியழகன் நஷ்டம் அடைந்ததால் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

Advertisment

complains about Actor Atharva

இதில் தலையிட்ட நடிகர் விஷால் இருதரப்பிலும் சமாதானத்தை ஏற்படுத்தி அதர்வாவிற்கு சேர வேண்டிய 1 கோடி பணத்தில் மீதமுள்ள 45 லட்ச ரூபாயை மதியழகனிடம் இருந்து பெற்றுதந்து அதேபோல இந்த படத்தில் நஷ்டம் ஏற்பட்ட மதியழகனுக்கு சம்பளம் இல்லாமல் ஒரு படம் நடித்து தருவதாக அப்போது மத்தியஸம் செய்யப்பட்டு அக்கிரிமெண்ட் போடப்பட்டது. அதன்பேரில் இன்றுவரை அதர்வா தனக்கு சொன்னபடி படத்தில் நடித்து கொடுக்க மறுத்து வருவதாகவும், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தபுகார் மனுவில்தெரிவித்துள்ளார் மதியழகன்.

case police atharvaa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe