9 ஆண்டுகளுக்கு பிறகு புகார்... போஸ்கோ சட்டத்தில் ஆசிரியர் கைது...

Teacher arrested

குனியமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அங்குள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருகிறார்.இவர் கோவை இராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தார்.

அதில் அம்மாணவி 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது, திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை கற்றுத்தர ஜெய்சங்கர் (39) என்ற ஆசிரியர் பாடம் நடத்தினார்.என் போன்ற மாணவிகளின் எண்களை வாங்கியவர், அவர்களது செல்போன் எண்னுக்கு திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்த தகவல்களை அனுப்பினார்.

இதனையடுத்து ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை மாணவிக்ளான எங்களுக்கு அனுப்ப்பினார்.உடனே அவரது எண்ணை துண்டித்து விட்டோம். இதனையடுத்து கடும் மன உளைச்சலில் இருந்த நான் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.

இந்நிலையில் தற்போது போஸ்கோ சட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து, 9 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் குறித்து இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன் என்றார்.

இதனையடுத்து காவல்துறையினர் சாமுவேல் ஜெய்சங்கரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.9 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச குறுச்செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

teacher arrested
இதையும் படியுங்கள்
Subscribe