Advertisment

கணவனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்த மனைவி கைது!

arrested

கணவனை காணவில்லை என்று போலீசில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகார் கொடுத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக இளையராஜா என்ற தனது கணவரை காணவில்லை என்று முத்துலெட்சுமி என்ற பெண் புகார் அளித்தார். வெளிநாட்டில் வேலை செய்து வந்த தனது கணவர், சொந்த ஊரான சந்திரபுளியங்களும் திரும்பினார். இந்தநிலையில் அவர் காணவில்லை என்று காரியாப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்ற போலீசார் இளையராஜாவை தேடி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த வாரம் காரியாப்பட்டியில் நகைக் கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் எலும்பு கூடு மூட்டையை எடுத்துச் சென்றதாக அவரது நண்பர் கூறியிருக்கிறார்.

போலீசார் விசாரணையில், முத்துலெட்சுமிக்கும் தனக்கும் தொடர்பு இருந்ததாகவும், இதனை இளையராஜா கண்டித்ததால் அவர் மீது கோபம் கொண்டு கொலை செய்து புதைத்துவிட்டதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தோண்டி, எலும்புகூடுகளை எடுத்து ஆற்றில் வீசயதாகவும் தெரிய வந்தது. இதுதொடர்பாக காரியாப்பட்டி போலீசார் மணிகண்டன், முத்துலெட்சுமி உள்பட 6 பேரை கைது செய்தனர்.

police murder arrest wife complaint missing husband
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe