Skip to main content

போட்டி வேட்பாளர்.. தேர்தலின் போதே வாக்கு கேட்பு.. எம்.பி. வெளியேற கோஷம்..  ஒத்திவைக்கப்பட்ட  நகரத் தேர்தல்! 

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

Competing candidate .. Voting during the election .. MP. Slogan to leave .. Postponed city election!

 

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 21, அதிமுக 5, பாஜக 1, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மமக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சைகள் 8 என வெற்றி பெற்றன. தனித்து நகர் மன்றத் தலைவர், நகர் மன்றத் துணை தலைவர் பதவியை பிடிப்பதற்கான பலத்தோடு ஆளுங்கட்சியான திமுக உள்ளது. இதனால் நகர் மன்றத் தலைவர் பதவியை பிடிக்க திமுகவில் பலத்த போட்டி நிலவியது.

 

நகர் மன்றத் தலைவர் பதவி பொதுப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் நகர திமுக கமிட்டி, மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகியான கவுன்சிலர் ஷப்பீர் அகமதுவை சேர்மனாக்க வேண்டும் என மொழிந்தது. ஆம்பூரில் பிரபலமான தனியார் காலணி தொழிற்சாலை உரிமையாளர் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆம்பூர் சேர்மன் யார் என்பதை அவர்தான் தீர்மானிப்பார். அவர் திமுகவை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ஏஜாஸ் அகமதுவை சேர்மனாக்க வேண்டும் என முயற்சியெடுத்தார்.

 

ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன், மாவட்ட கழக திமுக பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் போன்றோர் கம்பெனி தரப்புக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. திமுக தலைமை சேர்மன் வேட்பாளருக்கான பட்டியலை அறிவித்தபோது நகர கமிட்டியின்  விருப்பத்தை மீறி கம்பெனிகள் விரும்பிய கவுன்சிலர் ஏஜாஸ்அகமது பெயரை வெளியிட்டிருந்தது. இது ஆம்பூர் நகர தி.மு.க.வில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

 

திமுக தலைமையின் அறிவிப்பை மீறி தாங்கள் வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி ஆம்பூர் நகர் மன்ற அலுவலகத்தில் நகரமன்றத் தலைவருக்கான தேர்தல் பணிகள் தொடங்கியது. திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏஜஸ் அகமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் அதேபோல் ஆம்பூர் நகரம் கழகத்தின் விருப்பமான கவுன்சிலர் சபீர் அகமது போட்டியாக சேர்மனுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேர்தல் நடைபெறும் பகுதிக்கு திமுக எம்.எல்.ஏ. வில்வநாதன், எம்.பி. கதிர் ஆனந்த் போன்றோர் வருகை தந்தனர். எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் நகராட்சி வளாகத்தைவிட்டு வெளியேற வேண்டுமென திமுகவின் ஒரு தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியே பரபரப்பானது, காவல்துறை பாதுகாப்பு வழங்க அங்கிருந்து எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் வெளியேறினர்.

 

பின்னர் நகர் மன்றத் தலைவருக்கான தேர்தல் தொடங்கியபோது ஒவ்வொரு கவுன்சிலராக வாக்களிக்க ஏற்பாடு செய்தனர் அதிகாரிகள். அப்போது சேர்மன் தேர்தலில் நிற்கும் சபீர் அகமது எதற்கும் பயப்படாமல் எனக்கு வாக்களியுங்கள் என கேட்டார். அப்பொழுது ஒரு கவுன்சிலர் தனது வாக்கை செலுத்தி இருந்தார். வாக்களிக்கும் இடத்தில் எப்படி வாக்கு கேட்கலாம் என திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏஜாஸ் அகமது பிரச்சனை செய்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை நடத்துங்கள் என கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.