Compensation to the former village administrative officer! The consumer court ordered the bank!

அரியலூர் மாவட்டம், நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(63). இவர், கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தனது நண்பரின் மகன் ஆனந்தகுமார் என்பவரின் மருத்துவ படிப்புக்காக அந்த வங்கியில் கல்வி கடன் பெற்ற போது, அந்தக் கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டிருந்தார். சில மாதங்களுக்கு பிறகு அனந்தகுமார் வங்கிக்கு செலுத்த வேண்டிய கல்விக் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தவில்லை.

Advertisment

இந்த நிலையில் கண்ணன் 2017ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு அரசு வழங்கிய பணப் பலன் அனைத்தையும் கண்ணன் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு வந்தது. ஆனால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து எந்த பணத்தையும் எடுக்கக் கூடாது என வங்கி நிர்வாகம் தடுத்து நிறுத்திவைத்துவிட்டது. அதேசமயம், அவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்தற்கு பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து கண்ணன், வங்கி அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டும் அவர்கள் கண்ணன் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி வங்கி நிர்வாகம் கண்ணனுக்கு உரிய பணத்தை தர மறுத்தது மிகவும் கண்டனத்திற்குரியது. மனிதத் தன்மையற்ற செயல். எனவே கண்ணனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாயும் வழக்கு செலவுக்காக ரூபாய் 5000 சேர்த்து வங்கி நிர்வாகம் கண்ணனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.