ADVERTISEMENT

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் வழங்கிய நிறுவனம்

07:26 AM Dec 09, 2023 | ArunPrakash

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. காற்றின் வேகம் குறைவு என்றாலும், கடும் மழை சென்னை வாழ் மக்களை நிலைகுழையச் செய்துவிட்டது. நகரில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிசை வீடுகளிலும், மாடிவீட்டு கீழ்தளங்களிலும் குடியிருந்தவர்களின் வீட்டில் உள்ள அத்தனை உடமைகளும் நாசமானது. இதனை உணர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனவயல் பாரத் பால் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாழ் மக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பாலுடன், பாரத் பால் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் சென்னை சென்று பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு பால் பாக்கெட் வழங்கியதுடன் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் வழங்கிய பாரத்பால் நிறுவனத்தினர் நம்மிடம், புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் எப்படி எல்லாம் அவதிப்படுவார்கள், கஷ்டப்படுவார்கள் என்பதை 2018 கஜா புயலின் தாக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு உணர்ந்தவர்கள் நாங்கள். பல நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஆனால் சென்னையில் அதெல்லாம் சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. எங்கள் மக்களுக்கு எங்கிருந்தெல்லாமோ நிவாரணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் மக்கள் உடனே வேலைக்கு போகவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ முடியாத நிலையில் இருப்பார்கள் என்பதால், எங்கள் பாரத் பால் நிறுவனம் சார்பில் 5 லட்சம் லிட்டர் பால் கொண்டு வந்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி இருக்கிறோம் என்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT