Commuters suffer as escalators do not work at Erode Junction

தீபாவளி பண்டிகை வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை அடுத்து ஈரோடு கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் இப்போதே ஐவுளிகள் வாங்க அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் வெளியூரிலிருந்து ஈரோடு பேருந்து நிலையம். ஜங்ஷனுக்கு வருபவர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் ஈரோடு ஜங்ஷனில் நகரும் படிக்கட்டுகள் பழுதாக இருப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு ஜங்ஷங்கு கேரளா. வடமாநிலம். தென் மாவட்டம் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் ஈரோடு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்காக கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து ஜவுளிகள் வாங்கவும் விற்பனை செய்யவும் ஏராளமான வியாபாரிகள் ஈரோடு வருகின்றனர்.

இந்நிலையில் நகரும் படிக்கட்டுகள் கடந்த நான்கு நாட்களாக பழுதாக இருப்பதால் பொதுமக்கள் வியாபாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் இதனைச் சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.