சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர், வட்ட செயலாளர் அன்பழகன், மாவட்டக்குழு சித்ரா உள்ளிட்ட கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்களை சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.