Advertisment

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்!

Communist Party of India road blockade demanding central government

Advertisment

சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய பா.ஜ.க அரசின் கொள்கைகளைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர், வட்டச் செயலாளர் அன்பழகன், மாவட்டக்குழு சித்ரா உள்ளிட்ட கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்களை சிதம்பரம் காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

communist party
இதையும் படியுங்கள்
Subscribe