Published on 13/11/2021 | Edited on 13/11/2021

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நடேச தமிழார்வன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை கண்டித்தும், சமூக விரோதிகளை கைது செய்யக் கோரியும் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி தலைமையில் கிழக்குப் பகுதி செயலாளர் அன்சர்தீன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ், திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.