பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அந்தவகையில், சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் முன்பு அக்கட்சியின் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே. சிவா தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த போராட்டத்தில்;

* பெட்ரோல் டீசல் விலை உயர்வை வாபஸ் வாங்கிடு !

* தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கிடு !

Advertisment

* தமிழ்நாடு மக்கள் தொகைக்கு ஏற்ப கரோனா தடுப்பூசிகளை வழங்கிடு !

* செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி நிறுவனத்தைதமிழ்நாடு அரசு ஏற்று நடத்த உடனே அனுமதி வழங்கிடு !

உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.