Advertisment

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இரயில் மறியல் போராட்டம் : 400 பேர் கைது

Advertisment

தலித் சமூக மக்கள் மீதான தாக்குதல், அடக்கு முறை இந்தியா முழுக்க அதிகரித்துள்ளது இதை மத்திய பா.ஜ.க. அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாற்றாக மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்.ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரன தொகை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) சார்பில் இன்று தமிழகம் முழுக்க மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு பேரணியாக ரயில் நிலையத்திற்குள் சென்றனர். போலீசாரின் தடுப்பையும் மீறி உள்ளே சென்ற அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த கோவை ரயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

Erode struggle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe