தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 153 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 80 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட மாரிமுத்து, அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சுரேஷ்குமாரை தோற்கடித்து அபார வெற்றிபெற்றுள்ளார்.