Advertisment

ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

The Communist Party held a black flag strugle against the Tamil Nadu Governor

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகத்திற்குகள ஆய்வுக்காக இன்று தமிழக ஆளுநர் ரவி வருகை தந்துள்ளார். சாலை மார்க்கமாக வத்தலகுண்டு வழியாக அவர் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமையிலான அக்கட்சியினர் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பதாகைகள் மற்றும் கருப்பு கொடி, கருப்பு பலூன் ஆகியவைகளை ஏந்தியவாறு கோசமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.

The Communist Party held a black flag strugle against the Tamil Nadu Governor

Advertisment

காளியம்மன் கோவில் நான்கு முனை சந்திப்பில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்தும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் தொடர் கோஷங்களை முழங்கினர்.இதையடுத்து அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

தமிழக ஆளுநர் வருகை தருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி கருப்பு பலூனுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

governor police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe