பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்ன சேலத்தில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

communist party in Chinna Salem demanding various things!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பேருந்து நிலையத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குமாரிமுத்து தலைமையேற்றார். சி.பி.ஐ (எம்.எல்) ஒன்றியச் செயலாளர் ஜான்பாஷா முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், "கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்களை அதிகப்படுத்தவேண்டும், பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்திட வேண்டும்,மத்திய அரசின் விவசாயிகளுக்கான மானியத் திட்டத்தை விவசாய தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு விரிவுபடுத்திட வேண்டும்,ரயில்வே நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை ஒத்திவைத்திட வேண்டும்,தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டது.

cpi cpm
இதையும் படியுங்கள்
Subscribe