திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Communist Party announces constituencies in DMK alliance

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள்தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதிஎனஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானிசாகர், சிவகங்கை, திருப்பூர் வடக்கு, வால்பாறை, திருத்துறைப்பூண்டி, தளிஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.

communist party tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe