விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டம்..! (படங்கள்)

டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Farmers protest
இதையும் படியுங்கள்
Subscribe