Communist Mutharasan personally consoled Dinesh family

Advertisment

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் டி.வி.ரவி. இவரது மகன் இரா.தினேஷ்குமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை தனிச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தினேஷ்குமாரின் தந்தை ரவி உடல் நலக்குறைவால் சென்ற 12 ந் தேதி இரவு காலமானார்.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (14.5.2024) காலை தினேஷ் குமாரின் இல்லத்திற்கு சென்று மறைந்த அவரது தந்தை ரவியின் படத்திற்கு மலர் மரியாதை செய்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டுசென்றார். தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழக அமைச்சர்கள் திமுகவின் மூத்த நிர்வாகிகள் என பலரும் நேரில் வந்து தினேஷ் குமாருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று இரவு தினேஷ்குமாரின் இல்லத்திற்கு நேரில் வந்து மறைந்த அவரது தந்தையின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்ததோடு தினேஷ் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு சென்றார்.