kamal madurai

Advertisment

மதுரையில் வரும் 21ந் தேதி மாலை ஒத்தக்கடை ரிங் ரோடு வேளாண்மை கல்லூரி எதிரே உள்ள காலி இடத்தில் கட்சியின் பெயர், கொடி அறிமுகப்படுத்தி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்து கலந்து கொள்கிறார் கமல்ஹாசன். இந்த இடத்தின் வாடகை ரூ 2.50 லட்சமும் மைக், லைட், ஸ்டேஜ், பேரிக் காட் ஆகியவைகளுக்கு ரூ 17 லட்சம். இந்த குத்தகையை காரைக்குடி STR, ரவி குரூப்பும், பிக்கிவின்ஸ் ஏஜென்ஸி முகேஷ் குருப்பும் சேர்ந்து எடுத்துள்ளனர். இவர்களை கமலே நேரடியாக தேர்ந்த்தெடுத்துள்ளாராம்.

திருச்சியில் இருந்து உட்காரும் சேர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது . நகர போலீஸ் அலுவலகத்தில் அனுமதி எழுதி கொடுத்துள்ளார்களாம். இதுவரை எந்த பதிலும் இல்லை என்கின்றனர். இவை அனைத்தையும் கோவை தங்கவேலும், கபிலனும் தான் பார்த்துக் கொள்கிறார்களாம். இதில் மதுரை மாவட்ட மன்றத்தினர் நிர்வாகிகள் தலையீடு எதுவும் இல்லையாம். பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தில் நிர்வாகிகள் யாரும் இல்லை. பொதுக் கூட்டம் அன்று தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் பேர் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறுகிறார்கள் அங்குள்ளவர்கள்.

- ஷாகுல்