“அவதூறு கருத்துகளை தடுக்க குழுக்கள் அமைப்பு” - தமிழக அரசு

committees have been formed to prevent defamatory comments say tn govt

அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைத்தளங்களைக்கண்காணித்து தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும் அரசியல் கட்சியினரை கொச்சைப்படுத்தும் வகையிலும் செயல்படும் வலைத்தளங்களைதடுக்க கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி அடங்கியஅமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில்,அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைத்தளங்களைகண்காணித்து தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. அல்லது ஆணையரின்நேரடி கண்காணிப்பில், உதவி ஆய்வாளர் அந்தஸ்திற்கு குறையாத அதிகாரி தலைமையில் குழுக்கள் செயல்படுகின்றன. மேலும் மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் அலுவலகங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று, வழக்கை முடித்து வைத்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்
Subscribe