mk stalin

Advertisment

தமிழகத்தின் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்க குழு அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்க வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் இந்தக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எல்.ஜவஹர் நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், முனைவர் அருணா ரத்னம் உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து தனது பரிந்துரையை ஓராண்டிற்குள் இந்தக் குழு வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.