Advertisment

தேர்தல் ரத்து முடிவை மறுஆய்வு செய்ய முடியாது- உயர்நீதிமன்றம்

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு. அந்த முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரம் குடியாத்தம், ஆம்பூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்றுமாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

The Commission's decision can not be reviewed-high court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.சி சண்முகன்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தின் முறையீடு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்களைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும் வேட்பாளர்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும். வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு. அந்த முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது என தெரிவித்தது இந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்று மாலை 4.30 மணிக்குசென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Vellore Election highcourt
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe