Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்திவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறது. வாக்கு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,பலூனைபறக்கவிட்டு தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.