Commissioner Sathyapriya warns that strict action will be taken against anti-social elements

சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்தியப்பிரியா பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Advertisment

அதன்படி, திருச்சி மாநகரத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற ரவுடி வேட்டையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 72 சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், திருச்சி மாநகரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 16 சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 32 சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது குற்ற விசாரணை முறைச்சட்டம்- 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால், கடந்த ஒரு மாதத்தில் 24 சரித்திர பதிவேடு ரவுடிகள், எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாத வகையில், ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணையம் அவர்களிடமிருந்து பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.