Advertisment

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி உத்தரவின்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.