






Published on 19/03/2021 | Edited on 19/03/2021
வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வுசெய்து வருகிறார். அதேபோல், லயோலா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.